Thursday, 28 February 2013

காடை


காடை
Coturnix quail
காடை என்பது ஃபசியானிடே குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பேரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். காடை இனங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புகொண்டவை அல்ல. எனினும், அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என்ற ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.  
      காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழும் பறவைகள் ஆகும். இவை தானியங்களை உண்கின்றன. நிலத்தில் கூடு கட்டி வாழும் இவை, வேகமாக குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியன. சிலவகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் பெருமளவில் முட்டைக்காகவே வளர்க்கப்படுகின்றன.  
      நியூசிலாந்து காடை, பாப் வெள்ளைக் காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, நியூகினியா காடை, ஜப்பானியக் காடை போன்றவை காடை இனங்களாகும்.  
      காடை வளர்ப்பு பிரபல தொழிலாக வளர்ந்து வருகிறது. இவை பண்ணை முறையில் கூடுகளில் வளர்க்கப்படுகின்றன.


Friday, 15 February 2013

பனை மரம்


பனை மரம்
கற்பகத் தரு என அழைக்கப்படும் பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பயன்கள்:
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

Friday, 8 February 2013

வில்வமரம்


வில்வமரம்
Aegle marmelos

வில்வமரம் என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டதுஇம்மரம் பெரும்பாலும் இந்துமத ஆலயங்களில் வளர்க்கப்படுகிறதுஇதன் வேறு பெயர்களாவன கூவிளம்கூவிளை,சிவத்துருமம்நின்மலிமாலுரம் போன்றவையாகும்இம்மரம் வெப்ப மண்டல,மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும்வடிகால் வசதியுள்ள ஈரமுள்ளப் பகுதிகளிலும் செழித்து வளரும்.
            இமயமலை அடிவாரம்ஜீலம்பலுசிஸ்தானம் மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி வரையிலும் இம்மரம் பரந்து காணப்படுகிறது.
            இதன் காய்கள் உடனே முளைக்கும் திறன் உடையவைவிதைகளைப் பெரிய பாலிதின் பைகளில் விதைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடவு செய்வர்முளைத்த கன்றுகளை ஒன்றுக்கு ஒன்று சதுரத்தில் ஒரு அடி ஆழ குழியில் 3க்கு 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும். 15 முதல் 25 அடி உயரம் வரை இம்மரம் வளரும்கோடையில் இவை பெரும்பாலும் காய்க்கின்றனஇதன் காய்கள் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும்பூ பூக்காமலேயே காய்க்கும் ஒரே மரம் வில்வமரம். என்றாலும்இதற்கும் பூ உண்டு.
            இப்பழத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள்டேனிக் ஆசிட்பேக்டின் மற்றும் வழவழப்பான சத்துக்களும்மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின்பூமாரின்பிஸ்கிமானின் போன்ற சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றனஇதன் விதைகள்இலைகள்,தண்டுகளிலிருந்து ஒருவிதமான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
            இதன் இலைகளின் ஓரத்தில் முள் இருக்கும்இந்த இலைகள் உடல் வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவைஇலைகளை ஊற வைத்த நீரை அருந்தினால் பித்த நோய்நரம்பு வாயுகண்நோய் ஆகியன குணமாகும்பெண்களின் பெரும்பாடு நோயையும் போக்கவல்லதுஇதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
            நூறு வருடங்களுக்குமேல் வயதான வில்வமரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்நபிகள் நாயகம் வில்வபழத்தை சிறந்த மருந்து என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
            இதன் அறிவியல் பெயர் ஏகில் மார்மிலாஸ் (Aegle marmelos)என்பதாகும்.