Thursday, 7 March 2013
சுனாமி
சுனாமி
சுனாமி (Tsunami) என்பது ஜப்பானிய மொழிச்சொல் சு என்றால்துறைமுகம் னாமி என்றால் பேரலை அதாவது துறைமுகப் பேரலைஎனப்படுகிறது. தமிழில் இதை ஆழிப்பேரலை என்கிறோம். 2004 டிசம்பர் 26 - ஆம்தேதி இந்தியா இந்தப் பேரலையால் தாக்கப்படும்வரை இதன் தாக்கம்இந்தியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
ஆழிப்பேரலை முக்கியமாக மூன்று காரணங்களால் ஏற்படுகிறது.முதலாவது, கடலுக்கடியில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதன் மூலம்ஏற்படுகிறது. இரண்டாவது, கடலடியில் உள்ள எரிமலைகளில் பெரும்வெடிப்புகள் ஏற்படும்போது வருகிறது. மூன்றாவது, கடலடியில் பெரும்நிலச்சரிவு ஏற்படும்போது நிகழ்கிறது.
கி.பி. 1964 - ஆம் ஆண்டு அலாஸ்காவில் இந்த மூன்றும் அடுத்தடுத்துஒரே இடத்தில் நிகழ்ந்ததால் பெரும் சுனாமி ஏற்பட்டது. அதுவே இதுவரைவரலாற்றில் பதிவாகியுள்ள சுனாமிகளில் மிகப் பெரியது.
மேற்கூறியக் காரணங்களால் உந்தப்படும் கடல் நீரானது கடல்மட்டத்திற்கு கீழ் அதிவேகமாக பயணிக்கும் அலையாக உருவெடுக்கிறது. பலஆயிரம் கிலோமீட்டர்கள் அதே வேகத்தில் பயணித்து எதிர்ப்படும்நிலப்பரப்புகளில் மோதி மேலெழுந்து நிலபரப்பைப் தாக்குகிறது. இந்த அலைதன்னுடன் பெரும் பாறைகளையும், பெருமளவில் மணலையும், கடலடியில்படிந்திருக்கும் கழிவுகளையும் கொண்டுவந்து வெளியே தள்ளுகிறது.
Labels:
சுனாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment