பாம்பு
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான
உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை
உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில்
2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு
விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1%). இந்தியாவிலுள்ள நல்ல
பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப்
பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக்
கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து
நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு
விரைவில் இறக்க நேரிடும்.
வாழும் முறை இனப்பெருக்கம்
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள்,
பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள்
முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன.
ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது
புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இனவகைகள்
பாம்பியல்
அறிஞர்கள் 2,700க்கும் அதிகம் உள்ள பாம்பினங்களில் உட்பிரிவுகள் 11 என்றும் 15
என்றும் வேறுபடுகிறார்கள்.
நச்சுப்பாம்புகள்:
·
நாகப்பாம்பு (நல்ல
பாம்பு)
·
பவளப்பாம்பு
·
கடற்பாம்புகள்
·
புடையன்
·
விரைந்தோடும் ஆப்பிரிக்க கருப்பு மாம்பா (உலகிலேயே
மிக வேகமாக ஊரவல்ல பாம்பு; மணிக்கு 20 கி.மீ(12.5 mph)
வேகத்தில் சிறு தொலைவு ஊரவல்லவை)
மலைப்பாம்பு
·
வெண்ணாந்தை
·
போவா
நச்சற்ற பாம்புகள்:
·
சாரைப்பாம்பு
·
பச்சைப் பாம்பு
·
கொம்பேறி மூக்கன்
·
வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு
·
ஆனைக்கொன்றான் (Anaconda) உலகிலேயே நீளமான நீர்நிலைப் பாம்பு
(9 மீ)
பழமொழிகள்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது
ஒரு கூற்று.
பாம்பின் கால் பாம்பறியும்
வெண்ணாந்தை பற்றி தேடிய பொழுது இப்பக்கம் வந்தேன். படம் நன்றாக உள்ளது.வெண்ணாந்தை மேலும் சொல்ல இயலுமா?
ReplyDeletegood ,.. அருமை,,,
ReplyDelete