Wednesday, 17 April 2013

யானையின் பண்புகள்


யானையின் பண்புகள்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மனிதர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம், புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
யானையினங்கள்
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காதுகளை கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காதுகள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழ் இருக்கும். முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
தந்தம்
யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையாது. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.

Friday, 12 April 2013

காட்டுயிர்


காட்டுயிர்

காட்டுயிர் (wildlife) என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காட்டுயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான காட்டுயிர் வடிவங்கள் காணப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டில் இந்த வார்த்தை மனிதக் காரணிகளால் பாதிக்கப்படாத விலங்குகளைக் குறிப்பிட்ட போதும், பெரும்பாலான அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் காட்டுயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.
வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வு உள்ளிட்ட பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாக தெரிவித்துள்ளன. தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இலக்கியமும் காட்டுயிர்களில் இருந்து பண்டைய மனிதனைப் பிரிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.

Wednesday, 10 April 2013

கழுகுகள்


கழுகுகள்

தற்போதைய நிலவரப்படி கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவிலும் நேபாளத்திலும் கணிசமான தொகையில் உள்ளன.
கடந்த 1990 ல் இருந்து கழுகுகளின் எண்ணிக்கை 99% குறைந்து வந்தது. கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக டிக்ளோபினாக் என்ற ஒன்று உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த மருந்து கால்நடைகள் இறந்தப் பிறகும் அதன் உடலிலேயே தங்கிவிடுகிறது. இறந்த பிறகு அதன் உடலை உண்ண வரும் கழுகுகள் அந்த டிக்ளோபினாக் ஆல் கொல்லப்படுகின்றன. இதன் காரணத்தால் கழுகுகளின் எண்ணிக்கை அடிமட்டத்தில் இருந்தது.
இந்தியா, நேபாள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கம் இந்த அழிவைத் தடுப்பதற்காக டிக்ளோபினாக்கை தடைச்செய்தது. 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த டிக்ளோபினாக்கை உபயோகிப்பதால் கழுகுகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 40% குறைந்து கொண்டிருந்தது. அதை தடை செய்தப் பிறகு அதன் எண்ணிக்கை மாற்றம் கண்டுள்ளது.
பி.என்.எச்.எஸ் ஆய்வு ஒன்று நடத்தியது. இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களின் சாலைகளில் பதினைந்து கிலோமீட்டர் சுற்றளவில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில் கழுகுகளின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததே.
விபூ பிரகாக்ஷ் (பி.என்.எச்.எஸ்) என்பவர் கூறுகையில் “டிக்ளோபினாக் தடை செய்யப் பட்டப்பிறகு கழுகுகளின் எண்ணிக்கைக் குறையாமல் இருக்கின்றன. மேலும் அதன் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.
கழுகுகளைப் பாதுகாப்பதற்காக தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் ”சேவ்” என்ற ஒன்று. அதாவது ஆசிய கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது. இது 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட கூட்டம் காத்மண்டுவில் 5-6 நவம்பர் 2012 இல் நடைப்பெற்றது. இதில் இந்தியா, நேபாள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இதன் மூலம் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Saturday, 6 April 2013

தாவரம்


தாவரம்

தாவரம் (Plant) என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும்உயிரின பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளைநிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல்பன்னங்கள்(ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட

தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

Tuesday, 2 April 2013

அலங்காரத்திற்கு பயன்படும் ஹெலிகோனியம் கொய் மலர்



அலங்காரத்திற்கு பயன்படும் ஹெலிகோனியம் கொய் மலர்



       சமிபகாலமாக கொய் மலர்களில் பிரபலமடைந்து வரும் மலர் ஹெலிகோனியம். இது கிளி மலர், கிளி வாழை. பொய் வாழை, என்ற வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.
இதன் வடிவம் மற்றும் வண்ணம் அலங்காரத்தில் முக்கிய இடம் பெறுகிறது. விடுகளில் அலங்காரம், திருமண வரவேற்பு மற்றும் பல்வேறு விழாகளில் அலங்காரத்திற்கு ஹெலிகோனியம் பயன்படுத்தப்படுகிறது.

ஹெலிகோனியம்:
        
       ஹெலிகோனியம் தாவரம் பார்படோஸ், ஹவாய், பிரேசில்,வெனிசுலா ஆகிய அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 

தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இதில் 50 சதவீதம் அந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பயிரிடபட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

நீர் பற்றாக்குறை:

       நடவுக்கு முன் அதிக ஈரப்பதம் கொண்ட இடத்தை தேர்வு செய்து ஒரு சதுரமிட்டருக்கு 4 கிலோ மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஹெலிகோனியம் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்ப நீரை தேக்கி வைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை ஏற்படுவதை இலைகள் சுருண்டு காணப்படுவதை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


      அவ்வப்போது காய்ந்த இலைகள் மற்றும் தண்டுகளை அகற்ற வேண்டும். நிலப்போர்வை அமைத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஜனவரி மாதத்தில் நடவு செய்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூக்க தொடங்கி விடும். மொட்டு விட உருவான 15-வது நாளில் இருந்து அறுவடை செய்ய தொடங்கலாம்.

அறுவடை:


       அறுவடை செய்யும் போது பூத்தண்டின் நீளம் 70 செ.மீ முதல் 1 மீட்டர் வரை இருக்க வேண்டும். இது 15 முதல் 20 நாள் வாடாமல் இருக்கும். ஹெலிகோனியம் மலர்கள் செங்குத்தாகவும், தலைகீழாகவும் வளரும். அன்ட்ரோமிடா, அலெக்ஸ் ரெட், டிவார்ப்ஜமைக்கா, லேடி டி, லாத்திஸ்பேத்தி, பிளாக் செர்ரி, கென்யாரெட், ஸ்ராமெரி கிரீம் அகிய ரகங்கள் அலங்காரத்தில் மிகவும் பிரபலமானவை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQjlGCrJHIwh4ERS6wLefGqNTGInAEarqJogrvgyXYYLWl9MK93LDRlNcSljipZOWZk86U9u6R-WIgmWSGK38w0qQ-aaCrE2xrksAH5a3f3b63_FFccP0x0px19uhYYw0NsCI_EPgp7Vva/s320/exortic1.jpg


        நச்சத்திர ஒட்டல்கள், திருமண விழாக்கள், வீடுகள் அலங்காரம், தோட்டங்கள் அலங்காரம், என அனைத்து நிகழ்ச்சிக்கும் ஹெலிகோனியம் முன்னிலையில் உள்ளதால் கொய் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த மலரை சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். மேலும் தென்னை, வாழை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.