Tuesday, 2 April 2013

அலங்காரத்திற்கு பயன்படும் ஹெலிகோனியம் கொய் மலர்



அலங்காரத்திற்கு பயன்படும் ஹெலிகோனியம் கொய் மலர்



       சமிபகாலமாக கொய் மலர்களில் பிரபலமடைந்து வரும் மலர் ஹெலிகோனியம். இது கிளி மலர், கிளி வாழை. பொய் வாழை, என்ற வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.
இதன் வடிவம் மற்றும் வண்ணம் அலங்காரத்தில் முக்கிய இடம் பெறுகிறது. விடுகளில் அலங்காரம், திருமண வரவேற்பு மற்றும் பல்வேறு விழாகளில் அலங்காரத்திற்கு ஹெலிகோனியம் பயன்படுத்தப்படுகிறது.

ஹெலிகோனியம்:
        
       ஹெலிகோனியம் தாவரம் பார்படோஸ், ஹவாய், பிரேசில்,வெனிசுலா ஆகிய அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 

தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இதில் 50 சதவீதம் அந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பயிரிடபட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

நீர் பற்றாக்குறை:

       நடவுக்கு முன் அதிக ஈரப்பதம் கொண்ட இடத்தை தேர்வு செய்து ஒரு சதுரமிட்டருக்கு 4 கிலோ மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஹெலிகோனியம் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்ப நீரை தேக்கி வைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை ஏற்படுவதை இலைகள் சுருண்டு காணப்படுவதை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


      அவ்வப்போது காய்ந்த இலைகள் மற்றும் தண்டுகளை அகற்ற வேண்டும். நிலப்போர்வை அமைத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஜனவரி மாதத்தில் நடவு செய்தால் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூக்க தொடங்கி விடும். மொட்டு விட உருவான 15-வது நாளில் இருந்து அறுவடை செய்ய தொடங்கலாம்.

அறுவடை:


       அறுவடை செய்யும் போது பூத்தண்டின் நீளம் 70 செ.மீ முதல் 1 மீட்டர் வரை இருக்க வேண்டும். இது 15 முதல் 20 நாள் வாடாமல் இருக்கும். ஹெலிகோனியம் மலர்கள் செங்குத்தாகவும், தலைகீழாகவும் வளரும். அன்ட்ரோமிடா, அலெக்ஸ் ரெட், டிவார்ப்ஜமைக்கா, லேடி டி, லாத்திஸ்பேத்தி, பிளாக் செர்ரி, கென்யாரெட், ஸ்ராமெரி கிரீம் அகிய ரகங்கள் அலங்காரத்தில் மிகவும் பிரபலமானவை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQjlGCrJHIwh4ERS6wLefGqNTGInAEarqJogrvgyXYYLWl9MK93LDRlNcSljipZOWZk86U9u6R-WIgmWSGK38w0qQ-aaCrE2xrksAH5a3f3b63_FFccP0x0px19uhYYw0NsCI_EPgp7Vva/s320/exortic1.jpg


        நச்சத்திர ஒட்டல்கள், திருமண விழாக்கள், வீடுகள் அலங்காரம், தோட்டங்கள் அலங்காரம், என அனைத்து நிகழ்ச்சிக்கும் ஹெலிகோனியம் முன்னிலையில் உள்ளதால் கொய் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த மலரை சாகுபடி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். மேலும் தென்னை, வாழை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.



No comments:

Post a Comment