கழுகுகள்
தற்போதைய
நிலவரப்படி கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவிலும் நேபாளத்திலும் கணிசமான தொகையில் உள்ளன.
கடந்த
1990 ல் இருந்து கழுகுகளின் எண்ணிக்கை 99% குறைந்து வந்தது. கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக
டிக்ளோபினாக் என்ற ஒன்று உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த மருந்து கால்நடைகள் இறந்தப்
பிறகும் அதன் உடலிலேயே தங்கிவிடுகிறது. இறந்த பிறகு அதன் உடலை உண்ண வரும் கழுகுகள்
அந்த டிக்ளோபினாக் ஆல் கொல்லப்படுகின்றன. இதன் காரணத்தால் கழுகுகளின் எண்ணிக்கை அடிமட்டத்தில்
இருந்தது.
இந்தியா,
நேபாள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கம் இந்த அழிவைத் தடுப்பதற்காக டிக்ளோபினாக்கை
தடைச்செய்தது. 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த டிக்ளோபினாக்கை
உபயோகிப்பதால் கழுகுகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 40% குறைந்து கொண்டிருந்தது. அதை
தடை செய்தப் பிறகு அதன் எண்ணிக்கை மாற்றம் கண்டுள்ளது.
பி.என்.எச்.எஸ்
ஆய்வு ஒன்று நடத்தியது. இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களின் சாலைகளில்
பதினைந்து கிலோமீட்டர் சுற்றளவில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில் கழுகுகளின் எண்ணிக்கை
குறையாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததே.
விபூ
பிரகாக்ஷ் (பி.என்.எச்.எஸ்) என்பவர் கூறுகையில் “டிக்ளோபினாக் தடை செய்யப் பட்டப்பிறகு
கழுகுகளின் எண்ணிக்கைக் குறையாமல் இருக்கின்றன. மேலும் அதன் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான
வாய்ப்பு உள்ளது” என்றார்.
கழுகுகளைப்
பாதுகாப்பதற்காக தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் ”சேவ்” என்ற ஒன்று. அதாவது ஆசிய
கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது. இது 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்ட கூட்டம் காத்மண்டுவில் 5-6 நவம்பர் 2012 இல் நடைப்பெற்றது. இதில்
இந்தியா, நேபாள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இதன் மூலம் கழுகுகளின்
எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment