Showing posts with label பூமி வெப்பமடைதலின் விளைவுகள். Show all posts
Showing posts with label பூமி வெப்பமடைதலின் விளைவுகள். Show all posts

Sunday, 31 March 2013

பூமி வெப்பமடைதலின் விளைவுகள்

                 பூமி வெப்பமடைதலின் விளைவுகள்

         பூமி வெப்பமடைதல் என்ற வார்த்தை நாம் தினமும் கேட்கும் வார்த்தைகளிள் ஒன்று. அதை நாம் செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் பூமி வெப்பமடைகிறது அதன் காரணமாக கடல் மட்டம் உயர்கிறது, பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்று கேட்கும் பொழுது அதற்கும் நமக்கும் சமந்தம் இல்லாதது போல் கேட்டு கொண்டு இருப்போம். ஆனால் பூமியில் உள்ள ஒவ்வொறு மனிதனுக்கும் பூமியை காப்பதில் பங்கு உள்ளது. முதலில் பூமி வெப்பமடைதல் என்றால் என்ன ?
       பூமி வெப்பமடைதல் என்றால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.
கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன.
இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:
ü   கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;

ü   பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ü   பருவகாலங்கள் மாறலாம்

ü   வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.

ü  இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.

ü   உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.

ü   பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.

ü   பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ü   மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
 
ü  கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
   மேற்குறிப்பிட்டுள்ள அனைத்திற்க்கும் மனித குலமே காரணம். நாம் வாழ்ந்த இந்த அழகான பூமியியை நம் பிள்ளைகளும் பார்க்க வேண்டுமென்றால் நச்சு விளைவிக்கும் வாயுக்களை வெளிவிடும் பொருள்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.  சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.