Thursday, 28 February 2013

காடை


காடை
Coturnix quail
காடை என்பது ஃபசியானிடே குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பேரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். காடை இனங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புகொண்டவை அல்ல. எனினும், அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என்ற ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.  
      காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழும் பறவைகள் ஆகும். இவை தானியங்களை உண்கின்றன. நிலத்தில் கூடு கட்டி வாழும் இவை, வேகமாக குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியன. சிலவகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் பெருமளவில் முட்டைக்காகவே வளர்க்கப்படுகின்றன.  
      நியூசிலாந்து காடை, பாப் வெள்ளைக் காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, நியூகினியா காடை, ஜப்பானியக் காடை போன்றவை காடை இனங்களாகும்.  
      காடை வளர்ப்பு பிரபல தொழிலாக வளர்ந்து வருகிறது. இவை பண்ணை முறையில் கூடுகளில் வளர்க்கப்படுகின்றன.


Friday, 15 February 2013

பனை மரம்


பனை மரம்
கற்பகத் தரு என அழைக்கப்படும் பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பயன்கள்:
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

Friday, 8 February 2013

வில்வமரம்


வில்வமரம்
Aegle marmelos

வில்வமரம் என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டதுஇம்மரம் பெரும்பாலும் இந்துமத ஆலயங்களில் வளர்க்கப்படுகிறதுஇதன் வேறு பெயர்களாவன கூவிளம்கூவிளை,சிவத்துருமம்நின்மலிமாலுரம் போன்றவையாகும்இம்மரம் வெப்ப மண்டல,மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும்வடிகால் வசதியுள்ள ஈரமுள்ளப் பகுதிகளிலும் செழித்து வளரும்.
            இமயமலை அடிவாரம்ஜீலம்பலுசிஸ்தானம் மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி வரையிலும் இம்மரம் பரந்து காணப்படுகிறது.
            இதன் காய்கள் உடனே முளைக்கும் திறன் உடையவைவிதைகளைப் பெரிய பாலிதின் பைகளில் விதைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடவு செய்வர்முளைத்த கன்றுகளை ஒன்றுக்கு ஒன்று சதுரத்தில் ஒரு அடி ஆழ குழியில் 3க்கு 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும். 15 முதல் 25 அடி உயரம் வரை இம்மரம் வளரும்கோடையில் இவை பெரும்பாலும் காய்க்கின்றனஇதன் காய்கள் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும்பூ பூக்காமலேயே காய்க்கும் ஒரே மரம் வில்வமரம். என்றாலும்இதற்கும் பூ உண்டு.
            இப்பழத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள்டேனிக் ஆசிட்பேக்டின் மற்றும் வழவழப்பான சத்துக்களும்மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின்பூமாரின்பிஸ்கிமானின் போன்ற சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றனஇதன் விதைகள்இலைகள்,தண்டுகளிலிருந்து ஒருவிதமான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
            இதன் இலைகளின் ஓரத்தில் முள் இருக்கும்இந்த இலைகள் உடல் வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவைஇலைகளை ஊற வைத்த நீரை அருந்தினால் பித்த நோய்நரம்பு வாயுகண்நோய் ஆகியன குணமாகும்பெண்களின் பெரும்பாடு நோயையும் போக்கவல்லதுஇதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
            நூறு வருடங்களுக்குமேல் வயதான வில்வமரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்நபிகள் நாயகம் வில்வபழத்தை சிறந்த மருந்து என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
            இதன் அறிவியல் பெயர் ஏகில் மார்மிலாஸ் (Aegle marmelos)என்பதாகும்.

Thursday, 24 January 2013

மலை வேம்பு


மலை வேம்பு
 Melia dubia

மலை வேம்பு (தாவரவியல் பெயர்: Melia dubia.  மிலியேசியே(Meliaceae)க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது.
தாவரவியல் பண்புகள்

மரத்தின் பட்டை கருங்கபில நிறமானது, பெரிய நீள்சதுர செதில்களாக உதிருபவை. கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது,உரோமங்களுடையது , முதிரும் போது உரோமங்கள் மறைந்து விடும். இலைகள் இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்) அல்லது மூன்று முறை கிளைத்த சிறகு வடிவக்கூட்டிலை , ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது,மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, முதல் 30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.3-1.2 செ.மீ.; பின்னே 3-8 ஜோடிகள்; ஒர் பின்னே 2-11 சிற்றிலைகள் உடையது, எதிரடுக்கமானவை, 4.5-9 x 2-4 செ.மீ., முட்டை வடிவானது-நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், சமமற்றது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, கோரியேசியஸ், முதிரும் போது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், சீராக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பூக்காம்பு, 12-20 செ.மீ. நீளமானது; மலர்கள் பச்சை-வெள்ளை நிறமானது.கனிகள் உள்ளோட்டுத்தசைகனி, முட்டைவடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, நீள்வாக்கில் மேடுகளுடையது, சதைப்பற்றானது, மஞ்சள் நிறமானவை;   விதைகள் 1-6.
காலநிலை மற்றும் மண்
பசுமைமாறாக்காடுகளாகக் காணப்படும் மலை வேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

வகைகள்
மலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.

Thursday, 17 January 2013

பாம்பு


பாம்பு
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1%). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.
இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.
வாழும் முறை இனப்பெருக்கம்
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இனவகைகள்
பாம்பியல் அறிஞர்கள் 2,700க்கும் அதிகம் உள்ள பாம்பினங்களில் உட்பிரிவுகள் 11 என்றும் 15 என்றும் வேறுபடுகிறார்கள்.
நச்சுப்பாம்புகள்:
·         நாகப்பாம்பு (நல்ல பாம்பு)
·         பவளப்பாம்பு
·         கடற்பாம்புகள்
·         புடையன்
·         விரைந்தோடும் ஆப்பிரிக்க கருப்பு மாம்பா (உலகிலேயே மிக வேகமாக ஊரவல்ல பாம்பு; மணிக்கு 20 கி.மீ(12.5 mph) வேகத்தில் சிறு தொலைவு ஊரவல்லவை)
மலைப்பாம்பு
·         வெண்ணாந்தை
·         போவா
நச்சற்ற பாம்புகள்:
·         சாரைப்பாம்பு
·         பச்சைப் பாம்பு
·         கொம்பேறி மூக்கன்
·         வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு
·         ஆனைக்கொன்றான் (Anaconda) உலகிலேயே நீளமான நீர்நிலைப் பாம்பு (9 மீ)

பழமொழிகள்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது ஒரு கூற்று.
பாம்பின் கால் பாம்பறியும்

Thursday, 10 January 2013

யானை



யானையின் பண்புகள்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மனிதர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம், புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
யானையினங்கள்
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காதுகளை கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காதுகள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழ் இருக்கும். முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
தந்தம்
யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையாது. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.