Sunday, 31 March 2013

பூமி வெப்பமடைதலின் விளைவுகள்

                 பூமி வெப்பமடைதலின் விளைவுகள்

         பூமி வெப்பமடைதல் என்ற வார்த்தை நாம் தினமும் கேட்கும் வார்த்தைகளிள் ஒன்று. அதை நாம் செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் பூமி வெப்பமடைகிறது அதன் காரணமாக கடல் மட்டம் உயர்கிறது, பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்று கேட்கும் பொழுது அதற்கும் நமக்கும் சமந்தம் இல்லாதது போல் கேட்டு கொண்டு இருப்போம். ஆனால் பூமியில் உள்ள ஒவ்வொறு மனிதனுக்கும் பூமியை காப்பதில் பங்கு உள்ளது. முதலில் பூமி வெப்பமடைதல் என்றால் என்ன ?
       பூமி வெப்பமடைதல் என்றால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.
கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன.
இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:
ü   கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;

ü   பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ü   பருவகாலங்கள் மாறலாம்

ü   வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.

ü  இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.

ü   உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.

ü   பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.

ü   பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ü   மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
 
ü  கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
   மேற்குறிப்பிட்டுள்ள அனைத்திற்க்கும் மனித குலமே காரணம். நாம் வாழ்ந்த இந்த அழகான பூமியியை நம் பிள்ளைகளும் பார்க்க வேண்டுமென்றால் நச்சு விளைவிக்கும் வாயுக்களை வெளிவிடும் பொருள்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.  சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.

Friday, 15 March 2013

பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)



பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons)

தண்ணீரில் நடக்கும் பல்லி இனம் ஒன்று அமெரிக்காவில் வாழ்கிறது. இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி என்று அழைக்கிறார்கள்.
                ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் பாசிலிகஸ் பல்லிகள் (Basilicus Plumidrons) சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். இவை மத்திய அமெரிக்காவில்  அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஷிய்யும்ஜார்ஜ்லாடரும் கூறுகிறார்கள்.
                இந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும்பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன.
                இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத்  தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாக ஷிய்யும்ஜார்ஜ் லாடரும் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த பல்லி தண்ணீரில் ஓடும்போது தண்ணீரில் சிறு சிறு பிரகாசிக்கும் கண்ணாடி போன்ற மணித்துளிகளாகத் தெறிப்பதை மிக வேகமாக இயங்கும் வீடியோ கேமரா படம் பிடித்துள்ளது.

Thursday, 7 March 2013

சுனாமி


  

                                                         சுனாமி

சுனாமி (Tsunami) என்பது ஜப்பானிய மொழிச்சொல் சு என்றால்துறைமுகம் னாமி என்றால் பேரலை அதாவது துறைமுகப் பேரலைஎனப்படுகிறதுதமிழில் இதை ஆழிப்பேரலை என்கிறோம். 2004 டிசம்பர் 26 - ஆம்தேதி இந்தியா இந்தப் பேரலையால் தாக்கப்படும்வரை இதன் தாக்கம்இந்தியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

                ஆழிப்பேரலை முக்கியமாக மூன்று காரணங்களால் ஏற்படுகிறது.முதலாவதுகடலுக்கடியில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதன் மூலம்ஏற்படுகிறதுஇரண்டாவதுகடலடியில் உள்ள எரிமலைகளில் பெரும்வெடிப்புகள் ஏற்படும்போது வருகிறதுமூன்றாவதுகடலடியில் பெரும்நிலச்சரிவு ஏற்படும்போது நிகழ்கிறது.

                கி.பி. 1964 - ஆம் ஆண்டு அலாஸ்காவில் இந்த மூன்றும் அடுத்தடுத்துஒரே இடத்தில் நிகழ்ந்ததால் பெரும் சுனாமி ஏற்பட்டதுஅதுவே இதுவரைவரலாற்றில் பதிவாகியுள்ள சுனாமிகளில் மிகப் பெரியது.

                மேற்கூறியக் காரணங்களால் உந்தப்படும் கடல் நீரானது கடல்மட்டத்திற்கு கீழ் அதிவேகமாக பயணிக்கும் அலையாக உருவெடுக்கிறதுபலஆயிரம் கிலோமீட்டர்கள் அதே வேகத்தில் பயணித்து எதிர்ப்படும்நிலப்பரப்புகளில் மோதி மேலெழுந்து நிலபரப்பைப் தாக்குகிறதுஇந்த அலைதன்னுடன் பெரும் பாறைகளையும்பெருமளவில் மணலையும்கடலடியில்படிந்திருக்கும் கழிவுகளையும் கொண்டுவந்து வெளியே தள்ளுகிறது.

                இதன் காரணமாக சுனாமிக்குப் பிறகு கடலிலும்நிலப்பரப்பிலும் பெரும்மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் காணலாம்.

Friday, 1 March 2013

கடல் சிங்கம்


                                                        கடல் சிங்கம்

கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்ததும்மிகவும்புத்திசாலியானதுமான ஒரு உயிரினமே கடல் சிங்கம் (Sea Lion)மீசை,பற்களின் அமைப்பு போன்றவை ஓரளவுக்கு சிங்கத்தின் முகத்தைப் போலவேஇருப்பதால் இதனை கடல் சிங்கம் என்கிறார்கள்இவற்றுள் மொத்தம் ஏழு வகைகள் உள்ளன. இவை பந்து விளையாடும் அழகை காண்பதற்காகவே பலர்வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்வதும் உண்டு.                   இவை கடலிலும்நிலப்பரப்பிலும் கூட்டமாகவும் குடும்பமாகவும்வாழும். கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த இவற்றின் பெண் இனத்தைவிடஆண் இனம் பெரியதாக இருக்கும்உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களிலும்வாழ்ந்தாலும் அட்லாண்டிக் கடலிலும்இந்தியக் கடலிலும் இவைவாழ்வதில்லை               இதன் கால்கள் வேகமாக நீந்தவும்நடக்கவும் பயன்படுகின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒருவகை கடல் சிங்கம் தரையில்நன்கு வாழ்வதற்கு ஏற்றவாறு உடலமைப்பைப் பெற்றிருக்கிறதுஇவைமாதக்கணக்கில் கூட கடற்கரையிலேயே இருக்கும் கடல் வாழ் உயிரினமாகும்.                  இவை தங்களுக்குள் தனி மொழியில் பேசிக்கொள்கின்றன. எதையும்ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் மறுமுறை தானாகவே செய்துவிடும் அறிவுஜீவன்கள்சின்னஞ்சிறு மீன்களே இவற்றின் பிரதான உணவு. கடலில் தத்தளிக்கும் மனிதர்களை இவை காப்பாற்றிய சம்பவங்களும் நடந்ததுண்டு.
               இவற்றை விரட்டி விரட்டி வேட்டையாடும் முக்கிய எதிரிகளாக விளங்குபவை சார்க் வகை சுறாவும், திமிங்கலங்களும் ஆகும். இவற்றின் மொழி, கற்றுக்கொள்ளும் தன்மை, இருப்பிடம் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

Thursday, 28 February 2013

காடை


காடை
Coturnix quail
காடை என்பது ஃபசியானிடே குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பேரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். காடை இனங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புகொண்டவை அல்ல. எனினும், அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என்ற ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.  
      காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழும் பறவைகள் ஆகும். இவை தானியங்களை உண்கின்றன. நிலத்தில் கூடு கட்டி வாழும் இவை, வேகமாக குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியன. சிலவகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் பெருமளவில் முட்டைக்காகவே வளர்க்கப்படுகின்றன.  
      நியூசிலாந்து காடை, பாப் வெள்ளைக் காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, நியூகினியா காடை, ஜப்பானியக் காடை போன்றவை காடை இனங்களாகும்.  
      காடை வளர்ப்பு பிரபல தொழிலாக வளர்ந்து வருகிறது. இவை பண்ணை முறையில் கூடுகளில் வளர்க்கப்படுகின்றன.


Friday, 15 February 2013

பனை மரம்


பனை மரம்
கற்பகத் தரு என அழைக்கப்படும் பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பயன்கள்:
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

Friday, 8 February 2013

வில்வமரம்


வில்வமரம்
Aegle marmelos

வில்வமரம் என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டதுஇம்மரம் பெரும்பாலும் இந்துமத ஆலயங்களில் வளர்க்கப்படுகிறதுஇதன் வேறு பெயர்களாவன கூவிளம்கூவிளை,சிவத்துருமம்நின்மலிமாலுரம் போன்றவையாகும்இம்மரம் வெப்ப மண்டல,மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும்வடிகால் வசதியுள்ள ஈரமுள்ளப் பகுதிகளிலும் செழித்து வளரும்.
            இமயமலை அடிவாரம்ஜீலம்பலுசிஸ்தானம் மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி வரையிலும் இம்மரம் பரந்து காணப்படுகிறது.
            இதன் காய்கள் உடனே முளைக்கும் திறன் உடையவைவிதைகளைப் பெரிய பாலிதின் பைகளில் விதைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடவு செய்வர்முளைத்த கன்றுகளை ஒன்றுக்கு ஒன்று சதுரத்தில் ஒரு அடி ஆழ குழியில் 3க்கு 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும். 15 முதல் 25 அடி உயரம் வரை இம்மரம் வளரும்கோடையில் இவை பெரும்பாலும் காய்க்கின்றனஇதன் காய்கள் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும்பூ பூக்காமலேயே காய்க்கும் ஒரே மரம் வில்வமரம். என்றாலும்இதற்கும் பூ உண்டு.
            இப்பழத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள்டேனிக் ஆசிட்பேக்டின் மற்றும் வழவழப்பான சத்துக்களும்மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின்பூமாரின்பிஸ்கிமானின் போன்ற சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றனஇதன் விதைகள்இலைகள்,தண்டுகளிலிருந்து ஒருவிதமான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
            இதன் இலைகளின் ஓரத்தில் முள் இருக்கும்இந்த இலைகள் உடல் வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவைஇலைகளை ஊற வைத்த நீரை அருந்தினால் பித்த நோய்நரம்பு வாயுகண்நோய் ஆகியன குணமாகும்பெண்களின் பெரும்பாடு நோயையும் போக்கவல்லதுஇதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
            நூறு வருடங்களுக்குமேல் வயதான வில்வமரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்நபிகள் நாயகம் வில்வபழத்தை சிறந்த மருந்து என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
            இதன் அறிவியல் பெயர் ஏகில் மார்மிலாஸ் (Aegle marmelos)என்பதாகும்.